தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான தலா 5 டி20 போட்டிகளை கொண்ட தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்து தலா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ள நிலையில், அந்த 3 தொடர்களுக்கும் சேர்த்து 18 வீரர்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த ஆண்டின் இறுதியில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், அதற்கு தயாராகும் விதமாகவும் உலக கோப்பைக்கான வலுவான அணியை உறுதி செய்யும் விதமாகவும், அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல், ஆண்ட்ரே ரசல் ஆகிய அதிரடி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் நிகோலஸ் பூரன், ஹெட்மயர் ஆகிய இளம் அதிரடி வீரர்களும் கோட்ரெல், ஒஷேன் தாமஸ் ஆகிய ஃபாஸ்ட் பவுலர்களும் இடம்பெற்றுள்ளனர். அனுபவ ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர், அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் எவின் லூயிஸ் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி:

பொல்லார்டு(கேப்டன்), பூரன், ஃபேபியன் ஆலன், ட்வைன் பிராவோ, ஷெல்டான் கோட்ரெல், ஃபைடல் எட்வர்ட்ஸ், ஆண்ட்ரே ஃப்ளெட்சர், கிறிஸ் கெய்ல், ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹுசைன், எவின் லூயிஸ், ஒபெக் மெக்காய், ஆண்ட்ரே ரசல், லெண்டல் சிம்மன்ஸ், கெவின் சின்க்ளைர், ஒஷேன் தாமஸ், ஹைடன் வால்ஷ் ஜூனியர்.