வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 291 ரன்கள் அடித்தது. 292 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெய்ல், ஹெட்மயர், பிராத்வெயிட்டை தவிர யாருமே சரியாக ஆடவில்லை. அரைசதம் அடித்த ஹெட்மயரும் கெய்லும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் பொறுப்பை சுமந்த பிராத்வெயிட், தனி ஒருவனாக போராடி சதமடித்தார். 

வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்ற பிராத்வெயிட், கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க, 286 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட்டானது. இதையடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் நியூசிலாந்து இன்னிங்ஸின் முதல் பந்திலேயே கப்டில் அவுட்டாக, களத்திற்கு வந்த வில்லியம்சன் இரண்டாவது பந்தை மிட் ஆஃப் திசைக்கும் எக்ஸ்ட்ரா கவர் திசைக்கும் இடையே அடித்துவிட்டு நான்கு ரன்கள் ஓடினர். வில்லியம்சனும் முன்ரோவும் நான்கு ரன்கள் ஓடும்வரை, அந்த பந்தை விரட்டிச்சென்ற பிராத்வெயிட்டும் லெவிஸும் பந்தை பிடித்து வீசவில்லை. 

அந்த பந்தை விரட்டிச்சென்ற பிராத்வெயிட், பந்து பவுண்டரி லைனை நெருங்குவதற்கு முன்னதாக பிடிக்க நினைத்து டைவ் அடித்தார். ஆனால் டைவ் அடித்தும் பந்தை பிடிக்க முடியாமல் விட்டார். இதையடுத்து அவருக்கு பின்னால் ஓடிவந்த லெவிஸ் பந்தை பிடித்து எறிந்தார். இதற்கிடையே வில்லியம்சனும் முன்ரோவும் நான்கு ரன்களை ஓடியே எடுத்தனர். 

”பந்தை விரட்டிச்செல்லும் நம்ம ஆளுங்க வேகமா புடிச்சு வீசுருவாங்கனு” ஸ்டம்புகிட்ட காத்திருந்த கேப்டன் ஹோல்டருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வில்லியம்சனும் முன்ரோவும் 4 ரன்கள் ஓடியதை பார்த்துக்கொண்டிருந்த ஹோல்டர், தங்கள் அணி வீரர்களின் ஸ்லோ ஃபீல்டிங்கை கண்டு கடுப்பும் அதிருப்தியும் அடைந்தார். இந்த வீடியோவில் 4 ரன்கள் எடுக்கப்படும்போது ஹோல்டரின் முகத்தை பாருங்க..