பிக்பேஷ் லீக்கில் சிட்னி தண்டர் அணிக்கு எதிரான போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி வீரர் வெதரால்டு, ஒரே பந்தில் 2 முறை ரன் அவுட்டானார். 

பிக்பேஷ் லீக்கில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையே அடிலெய்டில் நேற்று நடந்த போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி, 20 ஓவரில் 159 ரன்கள் அடிக்க, 160 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிட்னி தண்டர் அணி 20 ஓவரில் 153 ரன்கள் மட்டுமே அடித்து ஆறு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

 இந்த போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் வீரர் வெதரால்டு ஒரே பந்தில் 2 முனைகளிலும் ரன் அவுட்டானார். கிறிஸ் க்ரீன் வீசிய பந்தை ஃபிலிப் சால்ட் ஸ்டிரைட்டாக அடிக்க, அது கிரீனின் கையில் பட்டு ஸ்டம்ப்பில் அடித்தது. ஸ்டம்ப்பில் பந்து அடிக்கும்போது, வெதரால்டின் பேட் க்ரீஸுக்குள் இல்லை. அதற்கு க்ரீன் அப்பீல் செய்துகொண்டிருக்கையிலேயே, ஃபிலிப் சால்ட் அதற்கு ரன் ஓட, வெதரால்டும் வேறு வழியின்றி ஓடினார்.

அப்போது ஃபீல்டர் பந்தை பிடித்து விக்கெட் கீப்பரிடம் த்ரோ செய்ய, விக்கெட் கீப்பர் வெதரால்டை ரன் அவுட் செய்தார். இரண்டையுமே பரிசோதிக்க வேண்டியிருந்ததால், அதை பரிசோதித்த தேர்டு அம்பயர் அவுட் கொடுத்தார். அதை ரிவியூ ரீப்ளேவில் பார்க்கும்போது, 2 முனைகளிலுமே வெதரால்டு அவுட்டானது புலப்பட்டது. அந்த வீடியோ இதோ..

Scroll to load tweet…