ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரர்களின் பட்டியலில் 49 சதங்களை அடித்த சச்சினுக்கு அடுத்த இடத்தில் 42 சதங்களுடன் கோலி உள்ளார். சச்சினின் சாதனையை முறியடிக்க, கோலிக்கு இன்னும் 8 சதங்கள் மட்டுமே தேவை. கோலி போய்க்கொண்டிருக்கும் வேகத்திற்கு இன்னும் பல சதங்களை குவிப்பார் என்பதில் சந்தேகமில்லை.  

விராட் கோலி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வருவதோடு மட்டுமல்லாமல், சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கில் புதிய மைல்கற்களை எட்டிவருகிறார். சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் கோலி, ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு பேட்டிங் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவருகிறார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் சாதனைகளை செய்ய தவறவில்லை. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 279 ரன்கள் அடித்தது. மழை குறுக்கீட்டால் டி.எல்.எஸ் முறைப்படி 46 ஓவர்களில் 270 ரன்கள் வெஸ்ட் இண்டீஸுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணி 42 ஓவரில் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அபாரமாக ஆடி சதமடித்தார். ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 42வது சதத்தை பதிவு செய்த கோலி, 120 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். உலக கோப்பையில் 5 அரைசதங்கள் அடித்தும் அதில் ஒன்றைக்கூட சதமாக மாற்றாத கோலி, உலக கோப்பைக்கு பின்னர் ஆடிய முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். 

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரர்களின் பட்டியலில் 49 சதங்களை அடித்த சச்சினுக்கு அடுத்த இடத்தில் 42 சதங்களுடன் கோலி உள்ளார். சச்சினின் சாதனையை முறியடிக்க, கோலிக்கு இன்னும் 8 சதங்கள் மட்டுமே தேவை. கோலி போய்க்கொண்டிருக்கும் வேகத்திற்கு இன்னும் பல சதங்களை குவிப்பார் என்பதில் சந்தேகமில்லை. 

இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர், கோலி தனது ஒருநாள் கிரிக்கெட் கெரியரில் எத்தனை சதங்கள் அடிப்பார் என கணித்துள்ளார். இதுகுறித்து வாசிம் ஜாஃபர் பதிவிட்டுள்ள டுவீட்டில், 11 இன்னிங்ஸுக்கு பிறகு மீண்டும் கோலி வேலையை ஆரம்பித்துவிட்டார். கோலி அவரது ஒருநாள் கெரியரில் 75-80 சதங்களை அடிப்பார் என்பது என் கணிப்பு என வாசிம் ஜாஃபர் பதிவிட்டுள்ளார். 

Scroll to load tweet…