டேவிட் வார்னர் தனது மனைவியுடன் தெலுங்கில் ஹிட்டடித்த “புட்ட பொம்மா” பாட்டிற்கு நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.  

கொரோனாவால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டதால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

எனவே சக வீரர்களுடன் அல்லது ரசிகர்களுடன் உரையாடுவது, அவர்களின் கேள்விகளுக்கு சமூக வலைதளங்களில் பதிலளிப்பது, ஆல்டைம் சிறந்த அணியை தேர்வு செய்வது என பொழுதுபோக்கிவருகின்றனர். 

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர், தெலுங்கில் அல்லு அர்ஜுன் - பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான அல வைகுந்தபுரம்லு திரைப்படத்தில் செம ஹிட்டடித்த புட்ட பொம்மு பாடலுக்கு தனது மனைவியுடன் நடனமாடி அசத்தியுள்ளார். 

அந்த வீடியோவில் வார்னரும் அவரது மனைவியும் நடனம் ஆட, இடையில் அவரது மகள் குறுக்கே ஓடி சிம்பிளாக ஒரு ஸ்டெப் போடுகிறார். அந்த மொத்த நடனத்தின் அழகே அந்த குட்டியின் ஸ்டெப் தான். அந்த வீடியோவை வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, அது தற்போது செம வைரலாகிவருகிறது.

View post on Instagram

அந்த வீடியோவை கண்ட அந்த பாடல் இடம்பெற்ற படத்தின் நாயகனான அல்லு அர்ஜுன், வார்னருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.