Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND அவரு மிகப்பெரிய மேட்ச் வின்னர்.. அடுத்த போட்டியில் அவரை கண்டிப்பா எடுக்கணும்..! லக்‌ஷ்மண் அதிரடி

இந்திய ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் மிகப்பெரிய மேட்ச் வின்னர் என்றும், அதனால் அவரை அடுத்த டெஸ்ட் போட்டிக்கான அணியில் கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்றும் விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.
 

vvs laxman opines ravichandran ashwin is the match winner and so he should be included in playing eleven
Author
London, First Published Aug 9, 2021, 9:21 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் மழையால் டிராவில் முடிந்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 183 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 278 ரன்கள் அடித்தது.

95 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 303 ரன்கள் அடிக்க, இதையடுத்து 209 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி, 4ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் அடித்திருக்க, கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணிக்கு வெறும் 157 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்திய அணி எளிதாக ஜெயித்திருக்க வேண்டிய இந்த போட்டியை மழை கெடுத்தது. கடைசி நாளான நேற்றைய ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டதால் போட்டி டிரா என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 2வது போட்டி வரும் 12ம் தேதி லண்டன் லார்ட்ஸில் தொடங்குகிறது. அந்த போட்டிக்கான இந்திய அணியில் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்பது பெரும் வலியுறுத்தல்களாக உள்ளன.

முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஸ்பின்னராக, அணியின் முதன்மை ஸ்பின்னரான அஷ்வினை எடுக்காமல் பேட்டிங்கை கருத்தில்கொண்டு ஜடேஜா எடுக்கப்பட்டது பெரும் விவாதத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளானது. இந்நிலையில், லார்ட்ஸில் நடக்கவுள்ள 2வது டெஸ்ட்டில் ஜடேஜாவுக்கு பதிலாக அஷ்வினை எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்திவருகின்றனர்.

அந்தவகையில், அஷ்வின் குறித்து பேசியுள்ள விவிஎஸ் லக்‌ஷ்மண், அஷ்வின் கண்டிப்பாக ஆடும் லெவனில் சேர்க்கப்பட வேண்டும். அஷ்வினை சேர்ப்பது, இந்திய அணியின் பவுலிங் யூனிட்டுக்கு வலு சேர்க்கும். வித்தியாசமான பவுலிங் ஆப்சன்களை கேப்டனுக்கு கொடுக்கும். 

எந்தவிதமான கண்டிஷனிலும் அஷ்வின் அருமையாக பந்துவீசக்கூடியவர். மேட்ச் வின்னிங் பெர்ஃபாமன்ஸை கொடுக்கக்கூடிய அஷ்வின், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கண்டிப்பாக பெரிய பிரச்னையாக திகழ்வார். எனவே அடுத்த டெஸ்ட் போட்டியில் அஷ்வினை கண்டிப்பாக ஆடும் லெவனில் சேர்க்க வேண்டும் என்றார் லக்‌ஷ்மண்.

Follow Us:
Download App:
  • android
  • ios