Asianet News TamilAsianet News Tamil

ஆசிய கோப்பை 2022: பயிற்சியில் அஷ்வின், சாஹலின் பவுலிங்கை அடி வெளுத்து வாங்கிய விராட் கோலி..! வைரல் வீடியோ

ஆசிய கோப்பைக்கு முன் இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், ஃபார்மில் இல்லாத விராட் கோலி பயிற்சியில் பெரிய ஷாட்டுகளை ஆடி தெறிக்கவிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

virat kohli playing big shots in nets ahead of asia cup 2022 video goes viral in internet
Author
First Published Aug 25, 2022, 5:17 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 27ம் தேதி முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்துகொண்டு ஆடுகின்றன.

ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் ஆகிய 3 அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளும் ஆடுகின்றன.  பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி வரும் 28ம் தேதி துபாயில் நடக்கிறது. இந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேதான் கடும் போட்டி நிலவும்.

இதையும் படிங்க - ஆசிய கோப்பையை எந்த அணி வெல்லும்..? ஷேன் வாட்சன் ஆருடம்

ஆசிய கோப்பையை தொடர்ந்து டி20 உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளதால், டி20 உலக கோப்பைக்கான முன்னோட்டமாக இந்த தொடர் அமைவதால், ஆசிய கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது இந்திய அணி.

ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சிறந்த வலுவான அணியாக திகழ்கிறது என்றாலும், இந்திய அணியின் சீனியர் வீரரும், மேட்ச்  வின்னருமான விராட் கோலி சுமார் 3 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கமுடியாமல் திணறிவருவதும், சரியான ஃபார்மில் இல்லாததால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் கஷ்டப்படுவதும் பெரும் பிரச்னையாக இருந்துவருகிறது.

விராட் கோலியின் ஃபார்ம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல முன்னாள் வீரர்கள் விராட் கோலியை விமர்சிக்கும் அதேவேளையில், கோலி ஃபார்மில் இல்லாவிட்டாலும் அவரைப்போன்ற பெரிய வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் ஃபார்முக்கு வந்துவிடுவார்கள் என்பதால் அவரை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று பாகிஸ்தான் அணியை அந்த அணியின் முன்னாள் வீரர்கள் எச்சரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க - ரோஹித், கோலி, ராகுல்லாம் இல்ல.. அந்த பையன் தான் டேஞ்சரஸ் பிளேயர்.. பாகிஸ்தானை எச்சரிக்கும் வாசிம் அக்ரம்

உலகத்தரம் வாய்ந்த தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலிக்கு ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டி சிறப்பானதாக அமையும்பட்சத்தில், தொடர் முழுவதும் பட்டைய கிளப்பிவிடுவார். எனவே விராட் கோலி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிவரும் நிலையில், பயிற்சியில் அடி வெளுத்துவாங்கியுள்ளார் கோலி.

வலைப்பயிற்சியில் சீனியர் ஸ்பின்னர் அஷ்வின் மற்றும் ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரின் பவுலிங்கையும் அடித்து நொறுக்கினர். இந்திய அணியின் 2 தரமான ஸ்பின்னர்களின் பவுலிங்கிலும் பெரிய ஷாட்டுகளை அடித்து நம்பிக்கையளித்தார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios