ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் முடிந்த கையோடு, இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ள இந்திய அணி, கடந்த 12ம் தேதியே ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்டது.

நவம்பர் 27ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்கவுள்ள நிலையில், இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். 

இந்திய வீரர்கள் ஃபீல்டிங் பயிற்சி செய்யும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஸ்லிப் ஃபீல்டிங்கில் லோயர் கேட்ச்களை பிடித்து கோலியும் புஜாராவும் பயிற்சி செய்தனர். அந்த பயிற்சியில் விராட் கோலி ஒற்றை கையில் ஒரு அபாரமான லோயர் கேட்ச்சை பிடித்து அசத்தினார். அதன்பின்னர் புஜாரா சில கேட்ச்களை பிடிக்க, மற்ற வீரர்கள் ஃபீல்டிங் பயிற்சி செய்யும் காட்சிகளும் உள்ளன. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.