உலக கோப்பை முடிந்த நிலையில், உலக கோப்பையில் சிறப்பாக ஆடிய 11 வீரர்களில் சிறந்த 11 வீரர்களை பல முன்னாள் ஜாம்பவான்கள் தேர்வு செய்துவருகின்றனர். ஐசிசியும் உலக கோப்பை தொடரின் பெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளது. 

முன்பெல்லாம் இதுபோன்று தேர்வு செய்யப்படும் அனைத்து கனவு அணிகள் மற்றும் சிறந்த அணிகளிலும் இயல்பாகவே நிரந்தரமாக இடம்பெற்றுவிடும் கோலி இப்போது எந்த அணியிலுமே இடம்பெறவில்லை. 

சச்சின் டெண்டுல்கர், கவாஸ்கர் ஆகிய ஜாம்பவான்கள் தேர்வு செய்த அணிகளில் மட்டுமல்லாது ஐசிசி தேர்வு செய்த அணியிலும் கோலி இல்லை. வழக்கமாக சதங்களையும் சாதனைகளையும் குவிக்கும் விராட் கோலிக்கு இந்த உலக கோப்பை எதிர்பார்த்த அளவிற்கு சிறந்ததாக அமையவில்லை. 

பொதுவாக அரைசதங்களை சதங்களாக மாற்றுவதில் வல்லவரான விராட் கோலி, உலக கோப்பை தொடரில் 5 அரைசதங்கள் அடித்தும் அதில் ஒன்றைக்கூட சதமாக மாற்றவில்லை. அவரால் மாற்றவும் முடியவில்லை. 2019 உலக கோப்பையில் 443 ரன்களை கோலி குவித்தார். ஆனால் உலக கோப்பை தொடரின் சிறந்த லெவனில் எடுக்கமளவிற்கான ஆட்டத்தை கோலி ஆடவில்லை. 

அதனால் தான் கவாஸ்கர், சச்சின், ஐசிசி தேர்வு செய்த எந்த அணியிலுமே விராட் கோலி தேர்வு செய்யப்படவில்லை. 

ஐசிசி தேர்வு செய்த 2019 உலக கோப்பையின் சிறந்த அணி:

ரோஹித் சர்மா, ஜேசன் ராய், கேன் வில்லியம்சன்(கேப்டன்), ஜோ ரூட், ஷகிப் அல் ஹசன், பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், ஃபெர்குசன், ஆர்ச்சர், பும்ரா. 

சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்த 2019 உலக கோப்பையின் சிறந்த அணி:

ரோஹித் சர்மா, பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன்(கேப்டன்), விராட் கோலி, ஷகிப் அல் ஹசன், பென் ஸ்டோக்ஸ், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, மிட்செல் ஸ்டார்க், ஆர்ச்சர், பும்ரா.

கவாஸ்கர் தேர்வு செய்த 2019 உலக கோப்பை தொடரின் சிறந்த அணி:

ரோஹித், வார்னர், ரூட், வில்லியம்சன், ஷகிப் அல் ஹசன், ஸ்டோக்ஸ், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, ஸ்டார்க், ஆர்ச்சர், பும்ரா.