IPL 2024: ஐபிஎல் வரலாற்றில் பேட்டிங்கில் யாருமே செய்யாத சாதனையை படைத்த ஒரே ஜாம்பவான் விராட் கோலி!

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் விராட் கோலி நம்பர் 1 இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Virat Kohli holds the record of being number 1 in the list of highest run scorers in the history of IPL cricket rsk

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

இதுவரையில் அணியுடன் இணையாத விராட் கோலி தற்போது தான் லண்டலிருந்து இந்தியா வந்துள்ளார். இன்று அல்லது நாளை அணியுடன் இணைந்து தனது பயிற்சியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடரானது விராட் கோலிக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொடராக பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், இதில் விராட் கோலி இடம் பெற்று விளையாட வேண்டுமானால், சிறப்பாக விளையாடி ரன்கள் குவிக்க வேண்டும்.

இதுவரையில் விராட் கோலி 234 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், 7 சதங்கள், 50 அரைசதங்கள் உள்பட 7263 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 643 பவுண்டரிகளும், 234 சிக்ஸர்களும் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 113 ரன்கள் எடுத்துள்ளார். இந்த நிலையில் தான் ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஒரு வீரர் அதிகபட்சமாக ஸ்கோர் எடுத்தது யார் என்றால் அது விராட் கோலி தான். ஆம், கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 4 சதங்கள், 7 அரைசதங்கள் உள்பட 973 ரன்கள் குவித்துள்ளார். இதற்காக விராட் கோலி ஆரஞ்சு கேப் பெற்றிருந்தார்.

இதுவரையில் எந்த ஒரு வீரரும் அதிகபட்ச ஸ்கோர் எடுக்கவில்லை. சுப்மன் கில் மட்டும் 890 ரன்கள் எடுத்துள்ளார். ஜோஸ் பட்லர் 863 ரன்கள் எடுத்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios