Asianet News TamilAsianet News Tamil

இந்திய அணியின் 2 விக்கெட் காலி.. ஆஃப்கான் பவுலிங்கை வெளுத்துவாங்கும் கோலி

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் ராகுல் ஏமாற்றினர். ஆனாலும் கேப்டன் விராட் கோலி அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து தொடர்ந்து அபாரமாக ஆடிவருகிறார். 

virat kohli hits fifty against afghanistan
Author
England, First Published Jun 22, 2019, 4:43 PM IST

உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

சவுத்தாம்ப்டனில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. பாகிஸ்தானுக்கு அபாரமாக ஆடி 140 ரன்களை குவித்த ரோஹித் சர்மா, மற்றுமொரு இரட்டை சதமடிக்கும் வாய்ப்பு இருந்தும் கூட 140 ரன்களில் அவுட்டானார். அதனால் கடும் அதிருப்தியடைந்தார். 

virat kohli hits fifty against afghanistan

எனவே பாகிஸ்தானிடம் விட்டதை ஆஃப்கானிஸ்தானிடம் பிடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரே ஒரு ரன் மட்டுமே அடித்து முஜீபுர் ரஹ்மானின் சுழலில் கிளீன் போல்டாகி வெளியேறினார் ரோஹித். 

இதையடுத்து ராகுலுடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். விராட் கோலி இறங்கியது முதலே அடித்து ஆட தொடங்கினார். நிதானமாக ஆடி களத்தில் நன்றாக செட்டான ராகுல், முகமது நபியின் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து ஆட்டமிழந்தார். 53 பந்துகளில் 30 ரன்கள் அடித்து அவுட்டானார். 

virat kohli hits fifty against afghanistan

அதன்பின்னர் கோலியுடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடிவருகிறார். விராட் கோலி விக்கெட் விழுந்ததை பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடித்து ஆடிவருகிறார். களத்தில் நன்றாக செட்டாகிவிட்ட கோலி, ஆஃப்கானிஸ்தான் பவுலிங்கை அடித்து நொறுக்கிவருகிறார். அரைசதம் கடந்த கோலி அபாரமாக ஆடிவருகிறார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து விஜய் சங்கரும் நன்றாக ஆடிவருகிறார். விராட் கோலி நன்றாக ஆடிவருவதால், தொடக்க வீரர்கள் ஏமாற்றினாலும் கூட, இந்திய அணி நல்ல ஸ்கோர் அடிப்பது உறுதி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios