நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது. 

முதல் போட்டி நடந்த ஆக்லாந்தில்தான் இரண்டாவது போட்டியும் நடந்தது. இந்த போட்டியில் இந்திய பவுலர்கள் அபாரமாக பந்துவீசி 132 ரன்களுக்கு நியூசிலாந்தை சுருட்டி, 133 ரன்கள் என்ற இலக்கை எளிதாக அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சக வீரர்களுக்கும், எதிரணி வீரர்களுக்கும் கூட அதிர்ச்சியளிக்கும் விதமாக எளிதான ஒரு கேட்ச்சை கோட்டைவிட்டார் கோலி. விராட் கோலி மிகச்சிறந்த ஃபீல்டர். ஒரு கேப்டனாக அணி வீரர்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்பவர். அசாத்தியமான கேட்ச்களைக்கூட பிடிக்கக்கூடியவர். நல்ல ஃபிட்னெஸுடன் இருப்பதால், எப்படி வேண்டுமானாலும் டைவ் அடித்து கேட்ச்களை பிடிக்கக்கூடியவர். 

அப்படியிருக்கையில், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பும்ராவின் பந்தில் டெய்லர் தூக்கியடித்த பந்து, அழகாக கையில் வந்து விழுந்தது. அந்த எளிய கேட்ச்சை கோலி கோட்டைவிட்டார். இது மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது. ஏனெனில் அதெல்லாம் கோலிக்கு ஒரு கேட்ச்சே இல்லை. அந்தளவிற்கு எளிய கேட்ச்சை விட்டார். ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த வீடியோ இதோ..