Asianet News TamilAsianet News Tamil

#RCBvsRR ஐபிஎல்லில் கோலி - படிக்கல் ஜோடியின் வரலாற்று சாதனை..! ஒட்டுமொத்த சாதனைகளின் பட்டியல்

ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பார்ப்போம்.
 

virat kohli and devdutt padikkal registers historic chasing record in ipl 2021
Author
Mumbai, First Published Apr 23, 2021, 2:23 PM IST

ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடேவில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 177 ரன்கள் அடிக்க, 178 ரன்கள் என்ற இலக்கை ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் கோலியும்(72), தேவ்தத் படிக்கல்லும்(101) இணைந்தே அடித்துவிட்டனர். படிக்கல்லின் அபார சதம் மற்றும் கோலியின் அரைசதம் ஆகியவற்றால் 17வது ஓவரிலேயே இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆர்சிபி அணி.

இந்த போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள் செய்யப்பட்டுள்ளன; புதிய மைல்கற்களும் எட்டப்பட்டுள்ளன. அவற்றின் பட்டியலை பார்ப்போம்.

1. ஐபிஎல்லில் ஆர்சிபிக்கு இது 4வது 10 விக்கெட் வித்தியாசத்திலான வெற்றி. இதற்கு முன் 2010 ஐபிஎலில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராகவும், 2015ல் டெல்லி டேர்டெவில்ஸுக்கு எதிராகவும், 2018ல் பஞ்சாப்புக்கு எதிராகவும் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது. அவையனைத்துமே 100 ரன்களுக்கும் குறைவான இலக்கை விரட்டியபோது அடைந்த வெற்றிகள். ஆனால் இப்போது 178 ரன்கள் என்ற இலக்கை விக்கெட் இழப்பின்றி அடித்து ஜெயித்துள்ளது ஆர்சிபி. அதிகபட்சமாக ஐபிஎல்லில் 2 முறை தான் 10 விக்கெட் வெற்றிகளை அணிகள் பெற்றுள்ளன. இதன்மூலம் ஐபிஎல்லில் அதிகமுறை(4) 10 விக்கெட் வித்தியாசத்திலான வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது.

2. ஷான் மார்ஷ்(2008 ஐபிஎல்லில் ராயல்ஸுக்கு எதிராக 115), மனீஷ் பாண்டே(2009ல் டெக்கான் சார்ஜர்ஸுக்கு எதிராக 114), பால் வல்தாட்டி(2011ல் சிஎஸ்கேவிற்கு எதிராக 120) ஆகிய மூவருக்கு அடுத்தபடியாக, ஐபிஎல்லில் சதமடித்த, தேசிய அணியில் அறிமுகமாகாத 4வது வீரர் என்ற சாதனையை தேவ்தத் படிக்கல் படைத்துள்ளார்.

3. ராயல்ஸுக்கு எதிராக 72 ரன்கள் அடித்த கோலி, ஐபிஎல்லில் 6000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். ஐபிஎல்லில் 6000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.

4. விராட் கோலி - தேவ்தத் படிக்கல் இடையேயான 181 ரன்கள் பார்ட்னர்ஷிப் தான், ஐபிஎல்லில் சேஸிங்கில் அடிக்கப்பட்ட அதிகபட்ச, ஓபனிங் பார்ட்னர்ஷிப் ஸ்கோர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios