பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் வெங்கடேஷ் ஐயர் அரைசதம் அடித்துள்ளார். ராகுல் திரிபாதியும் அருமையாக பேட்டிங் ஆடினார். எனவே கேகேஆர் அணி பெரிய ஸ்கோரை நோக்கி ஆடிவருகிறது. 

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில், பிளே ஆஃபிற்கு தகுதிபெறும் 4வது அணியாக முன்னேற போராடும் கேகேஆர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. துபாயில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய கேகேஆர் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தொடக்க வீரர் ஷுப்மன் கில் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான வெங்கடேஷ் ஐயர், கடந்த போட்டிகளை போலவே அருமையாக தொடங்கினார். தொடக்கம் முதலே அடித்து ஆடிய வெங்கடேஷ் ஐயர், ஷமி, எல்லிஸ், அர்ஷ்தீப், ரவி பிஷ்னோய், ஃபேபியன் ஆலன் ஆகிய பஞ்சாப் அணியின் அனைத்து பவுலர்களின் பவுலிங்கையும் வெளுத்துவாங்கிய வெங்கடேஷ் ஐயர் 39 பந்தில் அரைசதம் அடித்தார்.

வெங்கடேஷ் ஐயருடன் இணைந்து அருமையாக அடித்து ஆடிய ராகுல் திரிபாதி, ரவி பிஷ்னோயின் சுழலில் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் ஐயரும் நிதிஷ் ராணாவும் இணைந்து ஆடிவருகின்றனர்.