Asianet News TamilAsianet News Tamil

டர்னிங் பாய்ண்டான கடைசி ஓவர்- கடைசி 3 பந்தில் 3 விக்கெட் – ஒரு ரன்னில் த்ரில் வெற்றி பெற்ற யுபி வாரியர்ஸ்!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 15ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணியானது ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

UP Warriorz beat Delhi Capitals by 1 run Difference in 15th Match Of WPL Season 2 at Delhi
Author
First Published Mar 8, 2024, 11:07 PM IST

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்று வரும் 15ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் மகளிர் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, தொடக்க வீராங்கனை கிரன் நவ்கிரே 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் அலீசா ஹீலி 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தஹிலா மெஹ்ராத் 3, கிரேஸ் ஹாரிஸ் 14, ஷ்வேதா ஷெராவத் 4, பூனம் கேம்னர் 1, ஷோஃபி எக்லெஸ்டோன் 8 என்று வரிசையாக ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தீப்தி சர்மா மட்டுமே கடைசி வரை விளையாடி 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் டைடஸ் சாது மற்றும் ராதா யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஷிகா பாண்டே, அருந்ததி ராய், ஜெஸ் ஜோனாசென் மற்றும் அலீஸ் கேப்ஸி ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் 139 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அலீஸ் கேப்ஸி 15, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 17, அன்னபெல் சுதர்லேண்ட் 6 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒரு புறம் அதிரடியாக விளையாடிய மெக் லேனிங் 46 பந்துகளில் 12 பவுண்டரி உள்பட 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு அருந்ததி ரெட்டி 0, ஷிகா பாண்டே 4 என்று அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், கடைசி 2 ஓவர்களில் 15 ரன்கள் தேவை இருந்தது. அப்போது டெல்லி கேபிடல்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்திரிருந்தது. இறுதியாக கடைசி 2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து ஒரு ரன் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

பதினெட்டாவது ஒவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 5 ரன்கள் எடுத்தது. கடைசியாக 6 பந்துகளில் 10 ரன்கள் தேவை இருந்தது. இதில், முதல் பந்தை ராதா யாதவ் சிக்ஸருக்கு விரட்டினார், 2ஆவது பந்தில் 2 ரன்கள் எடுத்தார். கடைசி 4 பந்துகளில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை இருந்தது. ஆனால், கிரேஸ் ஹாரிஸ் கடைசி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றவே 19.5 ஓவர்களில் டெல்லி கேபிடல்ஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் தீப்தி சர்மா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சைமா தாகோர் மற்றும் கிரேஸ் ஹாரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஷோபி எக்லெஸ்டோன் ஒரு விக்கெட் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றி 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் நேரடியாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றிருக்கும். யுபி வாரியர்ஸ் விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோவியோடு புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

யுபி வாரியர்ஸ்:

அலீசா ஹீலி (விக்கெட் கீப்பர்/கேப்டன்), கிரன் நவ்கிரே, கிரேஸ் ஹாரிஸ், ஷ்வேதா ஷெராவத், தீப்தி சர்மா, பூனம் கேம்னர், ஷோபி எக்லெஸ்டோன், ராஜேஸ்வரி கெய்க்வாட், சைமா தாக்கூர், கோகெர் சுல்தானா, தஹிலா மெக்ராத்.

டெல்லி கேபிடல்ஸ்:

மெக் லேனிங் (கேப்டன்), ஷஃபாலி வர்மா, அலிஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அன்னபெல் சுதர்லெண்ட், ஜெஸ் ஜோனசென், அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், தனியா பாட்டீயா (விக்கெட் கீப்பர்), ஷிகா பாண்டே, டைட்டஸ் சாது

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios