வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி ஒருநாள் தொடரை 2-0 என வென்றுவிட்டது. எனவே நாளை நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி சில மாற்றங்களை செய்து, முதலிரண்டு போட்டிகளில் ஆடாத சில வீரர்களுக்கு இந்த போட்டியில் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

கொரோனா பாதிப்பால் முதலிரண்டு போட்டிகளில் ஆடாத தொடக்க வீரர் ஷிகர் தவான், கடைசி போட்டியில் ஆடுவார். ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பிவருவதாலும், ஆட்டத்தின் சூழலுக்கேற்ப ஆட தவறுவதாலும், அவரை பக்குவப்படுத்தும் விதமாக கடைசி போட்டியில் அவர் பென்ச்சில் உட்காரவைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டரில் ஆடும் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே ராகுலை விக்கெட் கீப்பராக இந்திய அணி நிர்வாகம் முயற்சி செய்திருக்கிறது. எனவே பேட்டிங் டெப்த்தை அதிகப்படுத்தும் விதமாக அவரிடம் விக்கெட் கீப்பிங் பொறுப்பு ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.

முதல் 2 போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்காத ஸ்பின்னர் குல்தீப் யாதவ் மற்றும் பவுலிங் ஆல்ரவுண்டர் தீபக் சாஹர் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக முறையே வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய இருவரும் நீக்கப்பட வாய்ப்புள்ளது. 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, தீபக் சாஹர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா.