உலக கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

உலக கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உலக கோப்பை தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது. இதுவரை 4 போட்டிகளில் ஆடி 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காமிடத்தில் உள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணி ஆடிய அனைத்து போட்டிகளிலும் தோற்று, முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இந்தியாவை எதிர்கொண்டு ஆடுகிறது. 

இந்திய அணியில் தவான் இல்லாததால் ராகுல், ரோஹித்துடன் தொடக்க வீரராக களமிறங்குவார். காயம் காரணமாக புவனேஷ்வர் குமார் இரண்டு போட்டிகளில் ஆடமாட்டார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதனால் இன்றைய போட்டியில் ஷமி ஆடுவார். நான்காம் வரிசை வீரராக விஜய் சங்கர் ஆடுவார்.

விஜய் சங்கருக்கு பயிற்சியின் போது காலில் சிறிய காயம் ஏற்பட்டது. ஆனால் அதனால் எந்த பாதிப்பும் இல்லை. எனவே இன்றைய போட்டியில் அவர்தான் இறங்குவார். ரிஷப் பண்ட் இறங்க வாய்ப்பில்லை. ஏனெனில் விஜய் சங்கர் பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலுமே அசத்தக்கூடியவர் என்பதால் அவர் கண்டிப்பாக அணியில் இருப்பார். 

உத்தேச இந்திய அணி:

ரோஹித், ராகுல், கோலி(கேப்டன்), விஜய் சங்கர், தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், ஷமி, பும்ரா.