Asianet News TamilAsianet News Tamil

#INDvsENG 3வது டி20: தொடக்க ஜோடியில் மற்றுமொரு மாற்றம்..? உத்தேச இந்திய அணி

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.
 

team india probable playing eleven for third t20 against england
Author
Ahmedabad, First Published Mar 15, 2021, 7:47 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதலிரண்டு டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

முதலிரண்டு போட்டிகளிலும் ரோஹித் சர்மா ஆடவில்லை. முதல் போட்டியில் ரோஹித்துக்கு பதிலாக தவான் இறங்கினார். அவர் சரியாக ஆடாததையடுத்து, 2வது போட்டியில் இஷான் கிஷன் அறிமுகமானார். அறிமுக போட்டியிலேயே அபாரமாக ஆடி அரைசதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

நாளை(செவ்வாய்க்கிழமை) நடக்கவுள்ள 3வது டி20யில் ரோஹித் சர்மா ஆடுவார் என்பதால், அவரது தொடக்க ஜோடியாக இஷான் கிஷன் - ராகுல் ஆகிய இருவரில் யார் ஆடுவார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. ராகுல் கடந்த போட்டிகளிலும் சேர்த்தே வெறும் ஒரு ரன் மட்டுமே அடித்து சொதப்பிய அதேவேளையில், இஷான் கிஷன் நன்றாக ஆடியிருப்பதால் அவர் இறக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஆனால் இஷான் கிஷன் - ராகுல் ஆகிய இருவரில் யார் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்கப்போகிறார் என்பது உறுதியாக தெரியவில்லை. ரோஹித் உள்ளே வருவதால் ஒரு வீரர் வெளியேற்றப்படுவார். அந்த ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட வாய்ப்புள்ளது.

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, ராகுல்/இஷான் கிஷன், கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர், சாஹல்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios