இந்தியா இங்கிலாந்து இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3 போட்டிகள் முடிந்துவிட்ட நிலையில், 2-1 என இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது. அதுமட்டுமல்லாது, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, இப்போதைக்கு இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி தோற்காமல் குறைந்தபட்சம் டிரா செய்தால் கூட, ஃபைனலுக்கு இந்திய அணி முன்னேறும். ஒருவேளை தோற்றுவிட்டால், ஆஸி., அணி ஃபைனலுக்கு முன்னேறி, நியூசிலாந்தை ஃபைனலில் எதிர்கொள்ளும். எனவே ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் போட்டி இது.

வரும் 24ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியில் பும்ரா ஆடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிவிட்டார். எனவே அவருக்கு பதிலாக சிராஜ் அல்லது உமேஷ் யாதவ் ஆகிய இருவரில் ஒருவர் இறங்குவார். ஸ்பின்னர்கள் அஷ்வின், அக்ஸர் படேல் தான் என்பது உறுதி. வாஷிங்டன் சுந்தரும் ஆடுவார். பேட்டிங் ஆர்டரில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.

கடைசி டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அஷ்வின், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ்.