Asianet News TamilAsianet News Tamil

#INDvsENG முதல் ஒருநாள் போட்டி: உத்தேச இந்திய அணி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.
 

team india probable playing eleven for first odi against england
Author
Pune, First Published Mar 21, 2021, 10:22 PM IST

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டெஸ்ட் தொடரை 3-1 என இந்தியாவிடம் இழந்த நிலையில், டி20 தொடரையும் இழந்தது இங்கிலாந்து அணி.

எனவே அடுத்ததாக நடைபெறும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையாவது வெல்லும் முனைப்பில் உள்ளது இங்கிலாந்து. இந்திய அணி ஒருநாள் தொடரையும் வெல்லும் முனைப்பில் உள்ளது. வரும் 23, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் புனேவில் நடக்கவுள்ளது.

இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம். கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித்தும் ராகுலும் தொடக்க வீரர்களாக இறங்க வாய்ப்புள்ளது. சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டிருப்பதால் அவர் மிடில் ஆர்டரில் ஆடுவார் என்பதால், ராகுல் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்கலாம். எனவே தவானுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காது.

ஷ்ரேயாஸ் ஐயர், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டும் ஆடுவார்கள். ஸ்பின் பவுலர்களாக குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகிய இருவரும் ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர் ஆகிய இருவரும் ஆடுவார்கள்.

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், சாஹல்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios