ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில், இந்திய அணி முதல் போட்டியிலேயே அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக பெற்ற வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது இந்திய அணி. 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு நடத்தப்படுகிறது. ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிதான் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டி. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நடக்கும் டெஸ்ட் போட்டிகள் அனைத்துமே டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிதான். 

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில், ஒரு டெஸ்ட் தொடருக்கு மொத்தமாக 120 புள்ளிகள். ஒரு குறிப்பிட்ட தொடரில் எத்தனை போட்டிகள் நடக்கிறதோ, அந்த நம்பரால் 120ஐ வகுத்தால் கிடைக்கும் கிடைக்கும் பாயிண்ட் தான், ஒரு போட்டியில் அடையும் வெற்றிக்கான பாயிண்ட்.

வெற்றி அடையும் அணிக்கான பாயிண்ட் = ( 120/அந்த தொடரின் போட்டிகளின் எண்ணிக்கை).

எனவே இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் தொடர் 2 போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் ஒரு போட்டியில் வென்றால் 60 புள்ளிகள். அந்தவகையில், வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றதால் 60 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி, முதல் போட்டியில் வென்று 60 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. அந்த அணியை பின்னுக்குத்தள்ளி இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. 

ஆஷஸ் தொடர் 5 போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் ஒரு போட்டியில் வென்றால் 24 புள்ளிகள். அந்தவகையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றதால் இரு அணிகளும் 24 புள்ளிகளை பெற்றன. ஒரு போட்டி டிரா ஆனதால் இரு அணிகளுக்கும் தலா 12 புள்ளிகள் வழங்கப்பட்டன. இரு அணிகளுமே 32 புள்ளிகளுடன் 3 மற்றும் நான்காமிடத்தில் உள்ளன. ஆஸ்திரேலிய அணி மூன்றாமிடத்திலும் இங்கிலாந்து அணி நான்காமிடத்திலும் உள்ளன.