சையத் முஷ்டாக் அலி தொடர் கடந்த 10ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. லீக் சுற்றில் ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ஹரியானா, பரோடா, ராஜஸ்தான்  மற்றும் பீகார் ஆகிய 8 அணிகளும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. காலிறுதியில் கர்நாடகா vs பஞ்சாப், தமிழ்நாடு vs இமாச்ச பிரதேசம், ஹரியானா vs பரோடா, பீகார் vs ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

இந்த அனைத்து போட்டிகளுமே அகமதாபாத்தில் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் மதியம் 12 மணி மற்றும் இரவு 7 மணிக்கு என மொத்தம் 4 போட்டிகள் நடக்கவுள்ளன.

வரும் 29ம் தேதி மதியம் 12 மணிக்கு ஒரு அரையிறுதியும், இரவு 7 மணிக்கு மற்றொரு அரையிறுதி போட்டியும் நடக்கவுள்ளன. 31ம் தேதி இறுதி போட்டி நடக்கவுள்ளது.