சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியில் யாரும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. அலெக்ஸ் கேரி தலைமையிலான அந்த அணியில் அனைத்து பேட்ஸ்மேன்களுமே ஓரளவிற்கு பங்களிப்பு செய்ய, அந்த அணி, 20 ஓவரில் 176 ரன்களை எடுத்தது. 

177 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜோஷ் ஃபிலிப் மற்றும் ஜஸ்டின் அவந்தானோ ஆகிய இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 72 ரன்களை சேர்த்தனர். ஜஸ்டின் 47 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் டேனியல் ஹியூக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

ஆனால் மறுமுனையில் நங்கூரமிட்டு அடித்து ஆடிய ஜோஷ் ஃபிலிப் அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பின்னரும் சிறப்பாக ஆடிய ஃபிலிப், கடைசி வரை களத்தில் நின்று தனது பணியை செவ்வனே முடித்தார். ஃபிலிப்பின் சிறப்பான பேட்டிங்கால் கடைசி ஓவரில் இலக்கை எட்டி சிட்னி ஸ்டிரைக்கர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

52 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 83 ரன்களை குவித்த ஃபிலிப் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.