Asianet News TamilAsianet News Tamil

சூர்யகுமார் யாதவ்விற்கு கிளீரன்ஸ் சான்றிதழ் கிடைக்கவில்லை – ஸ்கை வருவார் நம்பிக்கையிலும் இருக்கும் எம்.ஐ!

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்டார் வீரரான சூர்யகுமார் யாதவ்விற்கு இன்னும் உடல் தகுதிக்கான சான்றிதழ் கிடைக்கவில்லை. எனினும், அவர் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Suryakumar Yadav not fit still waiting for clearance from NCA, his next fitness test is coming 21st march rsk
Author
First Published Mar 19, 2024, 8:03 PM IST

ஐபிஎல் தொடரில் முதல் முறையாக 5 முறை டிராபியை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் திகழ்கிறது. 6ஆவது முறையாக டிராபியை கைப்பற்ற வேண்டும் குறிக்கோளுடன் இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது. இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில், ஜெரால்டு கோட்ஸி, முகமது நபி, தில்சன் மதுஷங்கா, நுவான் துஷாரா, ஷ்ரேயாஸ் கோபால், ஷிவாலிக் சர்மா, அன்ஷுல் கம்போஜ், நமன் திர் ஆகியோர் மும்பை இந்தியஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் திலக் வர்மா, டிம் டேவிட், இஷான் கிஷான், விஷ்ணு வினோத், அர்ஜூன் டெண்டுல்கர், சாம்ஸ் முலானி, நேஹல் வதேரா, ஜஸ்ப்ரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரன்டார்ஃப், ரொமாரியோ ஷெஃபெர்டு ஆகியோர் தக்க வைக்கப்பட்டனர்.

மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சூர்யகுமார் யாதவ் இதுவரையில் அணியில் இடம் பெறவில்லை. கடந்த ஆண்டு நடந்த தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த டி20 போட்டியின் போது கணுக்கால் பகுதியில் காயம் அடைந்த நிலையில் ஜெர்மனி சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து நீண்ட நாள் ஓய்விற்கு பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சூர்யகுமார் யாதவ் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இதுவரையில் சூர்யகுமார் யாதவ் உடல் தகுதியை எட்டவில்லை. வரும் ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில், அவசரப்பட்டு அவரை களமிறக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அடுத்த உடல் தகுதி தேர்வு வரும் 21 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் தான் சூர்யகுமார் யாதவ் தனது ஐபிஎல் தொடரின் முதல் பாதி ஆட்டத்தில் பங்கேற்கமாட்டார் என்று தெரிகிறது. இதன் காரணமாக தனது இன்ஸ்டா ஸ்டோரியில் இதயம் நொறுங்கியது போன்று எமோஜியை பதிவிட்டுள்ளார். ஏற்கனவே மும்பை அணியில் இடம் பெற்றிருந்த ஜேசன் பெஹ்ரண்டார்ஃப் காயம் காரணமாக விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக, லூக் உட் அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ் விளையாடும் போட்டிகள்:

மார்ச் 24: குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – அகமதாபாத் – இரவு 7.30 மணி

மார்ச் 27 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ் – ஹைதராபாத் - இரவு 7.30 மணி

ஏப்ரல் 01 – ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – மும்பை – இரவு 7.30 மணி

ஏப்ரல் 07 – டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் – மும்பை – பிற்பகல் 3.30 மணி

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios