சிங்கம் களம் இறங்கிடுச்சு, இனி ஒருத்தரும் ஒழுங்கா பவுலிங் போட முடியாது – சூர்யகுமார் யாதவ் ஃபிட் என அறிவிப்பு!

தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வந்த சூர்யகுமார் யாதவ் தற்போது உடல் தகுதியுடன் இருப்பதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Suryakumar Yadav Declared Fit by NCA and Ready to Join Mumbai Indians team and will play against delhi capitals rsk

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரின் போது சூர்யகுமார் யாதவ் கணுக்கால் பகுதியில் தசைநார் கிழிவால் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். எனினும் அவருக்கு குடலிறக்கம் (ஹெர்னியா) பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கு ஜெர்மனியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நீண்ட நாள் ஓய்விற்கு பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இதற்கிடையில் ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் தொடங்கப்பட்டது. இதில், மும்பை இந்தியன்ஸ் 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது. இதுவரையில் சூர்யகுமார் யாதவ் உடல் தகுதி பெறவில்லை என்று அறிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் தற்போது சூர்யகுமார் யாதவ் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கிரிக்கெட் அகாடமி சார்பில் சில பயிற்சி போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதையடுத்து அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பிசியோ, இனி எந்த வாய்ப்பையும் எடுக்க விரும்பவில்லை. யாதவ் உடல் தகுதியுடன் இருப்பதைக் கண்டு முழுமையாக திருப்தி அடைந்தனர். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணையலாம். மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைவதற்கு முன்னதாக 100 சதவிகித உடல் தகுதியுடன் இருக்கிறார். மேலும், போட்டிகளில் பங்கேற்க தயாராக இருக்கிறார்.

ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடந்த ஃபிடனஸ் டெஸ்டில் அவர் 100 சதவிகிதம் உடல் தகுதி பெறவில்லை. ஆகையால், அவர் பேட்டிங் செய்யும் போது ஏதேனும் வலி இருக்கிறதா என்பதை சோதனை செய்வதற்காக இத்தனை நாட்கள் காத்திருந்தோம் என்று பிசியோ தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூர்யகுமார் யாதவ் இல்லாதது ஒரு குறையாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் அணிக்கு திரும்பியுள்ளார். வரும் 7ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அணியில் இடம் பெற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரையில் விளையாடிய 3 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எஞ்சிய 11 போட்டிகளில் குறைந்தது 8 போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் லீக் சுற்றுடன் வெளியேறும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios