Asianet News TamilAsianet News Tamil

மகளிர் டி20 சேலஞ்ச்:டாட்டின் அதிரடி அரைசதம்;ஃபைனலில் வெலாசிட்டி அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த சூப்பர்நோவாஸ்

வெலாசிட்டிக்கு எதிரான மகளிர் டி20 சேலஞ்ச் தொடரின் ஃபைனலில் சூப்பர்நோவாஸ் அணி 20 ஓவரில் 165 ரன்கள் அடித்து, 166 ரன்கள் என்ற சவாலான இலக்கை வெலாசிட்டி அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

supernovas set challenging target to velocity in womens t20 challenge
Author
Pune, First Published May 28, 2022, 9:42 PM IST

வெலாசிட்டிக்கு எதிரான மகளிர் டி20 சேலஞ்ச் தொடரின் ஃபைனலில் சூப்பர்நோவாஸ் அணி 20 ஓவரில் 165 ரன்கள் அடித்து, 166 ரன்கள் என்ற சவாலான இலக்கை வெலாசிட்டி அணிக்கு நிர்ணயித்துள்ளது.

மகளிர் டி20 சேலஞ்ச் தொடரின் ஃபைனல் சூப்பர்நோவாஸ் மற்றும் வெலாசிட்டி அணிகள் ஆடிவருகின்றன. புனேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வெலாசிட்டி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய சூப்பர்நோவாஸ் அணியின் தொடக்க வீராங்கனை டாட்டின் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். மற்றொரு தொடக்க வீராங்கனையான ப்ரியா புனியா 28 ரன்கள் அடித்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் அதிரடியாக ஆடி 43 ரன்கள் அடித்தார்.

பூஜா வஸ்த்ராகர், சுனே லூஸ், ஹர்லீன் டியோல் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். அரைசதம் அடித்த டாட்டின் 44 பந்தில் 62 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 165 ரன்கள் அடித்த சூப்பர்நோவாஸ் அணி, 166 ரன்கள் என்ற சவாலான இலக்கை வெலாசிட்டி அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios