Asianet News TamilAsianet News Tamil

IPL 2021 வாழ்வா சாவா போட்டியில் KKR அணியில் ஒரு மாற்றம்.! அனுபவ ஆல்ரவுண்டரை இறக்கிவிட்ட KKR.. டாஸ் ரிப்போர்ட்

கேகேஆருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

sunrisers hyderabad win toss opt to bat against kkr in ipl 2021 uae leg
Author
Dubai - United Arab Emirates, First Published Oct 3, 2021, 7:18 PM IST

ஐபிஎல் 14வது சீசனின் புள்ளி பட்டியலில் சுவாரஸ்யமாக உள்ளது. லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இன்று சன்ரைசர்ஸை எதிர்கொள்கிறது கேகேஆர் அணி. சன்ரைசர்ஸ் லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகிவிட்டதால், அந்த அணிக்கு இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் கேகேஆர் அணிக்கு இந்த போட்டி மிக முக்கியம்.

துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சன்ரைசர்ஸ் அணியில் சந்தீப் ஷர்மாவுக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

ஜேசன் ராய், ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன்(கேப்டன்), அபிஷேக் ஷர்மா, பிரியம் கர்க், அப்துல் சமாத், ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், உம்ரான் மாலிக்.

கேகேஆர் அணியில் டிம் சேஃபெர்ட் நீக்கப்பட்டு அனுபவ ஆல்ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் சேர்க்கப்பட்டுள்ளார்.

கேகேஆர் அணி:

வெங்கடேஷ் ஐயர், ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஒயின் மோர்கன்(கேப்டன்), ஷகிப் அல் ஹசன், தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், டிம் சௌதி, வருண் சக்கரவர்த்தி, ஷிவம் மாவி. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios