Asianet News TamilAsianet News Tamil

IPL 2021 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளில் அதிரடி மாற்றங்கள்.! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

sunrisers hyderabad and rajasthan royals probable playing eleven for the match in ipl 2021 uae leg
Author
Dubai - United Arab Emirates, First Published Sep 26, 2021, 10:37 PM IST

ஐபிஎல் 14வது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை துபாயில் நடக்கிறது. சன்ரைசர்ஸ் அணி ஏற்கனவே இந்த சீசனில் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், ராஜஸ்தான் அணிக்கு இது முக்கியமான போட்டி.

இந்த போட்டிக்கான சன்ரைசர்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்படலாம். தொடர்ச்சியாக திணறிவரும் தொடக்க வீரரும் முன்னாள் கேப்டனுமான டேவிட் வார்னர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் சேர்க்கப்படலாம். அதேபோல கேதர் ஜாதவுக்கு பதிலாக விராட் சிங் அல்லது பிரியம் கர்க் ஆகிய இருவரில் ஒருவர் சேர்க்கப்படலாம்.

உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

ஜேசன் ராய், ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன்(கேப்டன்), மனீஷ் பாண்டே, விராட் சிங்/பிரியம் கர்க், ஜேசன் ஹோல்டர், அப்துல் சமாத், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் ஷர்மா, கலீல் அகமது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் 2 மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் ஆடாத எவின் லூயிஸ் மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகிய இருவரும் சேர்க்கப்படுவார்கள். அதனால் டேவிட் மில்லர் மற்றும் ஷாம்ஸி ஆகிய இருவரும் நீக்கப்படலாம்.

உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், எவின் லூயிஸ், சஞ்சு சாம்சன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், மஹிபால் லோம்ரார், ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, கிறிஸ் மோரிஸ், கார்த்திக் தியாகி, சேத்தன் சக்காரியா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios