Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND தொடரை ஜெயிச்சு முடிக்கும் வரை நோ ரெஸ்ட்..! அவங்க 2 பேருமே கடைசி டெஸ்ட்டில் ஆடணும்.. கவாஸ்கர் அதிரடி

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர்கள் பும்ரா மற்றும் ஷமி ஆகிய இருவருமே ஆடவேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
 

sunil gavaskar opines jasprit bumrah and mohammed shami should play in last test against england
Author
Manchester, First Published Sep 9, 2021, 3:48 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 4 போட்டிகள் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 3-1 என வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.

இந்த தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துவிட்ட இங்கிலாந்து அணிக்கு, கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெற்று குறைந்தபட்சம் தொடரை 2-2 என டிரா செய்யும் வாய்ப்பிருக்கிறது. எனவே கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெற்று தொடரை டிராவிலாவது முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இங்கிலாந்து அணி உள்ளது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மான்செஸ்டரில் தொடங்குகிறது. கடைசி டெஸ்ட்டில் வென்றால் தான் தொடரை வெல்ல முடியும் என்பதால், கடைசி டெஸ்ட்டில் பும்ராவிற்கு ஓய்வளிக்கக்கூடாது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்த தொடரில் இந்திய அணி இங்கிலாந்து மீது ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளை பெற முக்கியமான காரணம், உலகத்தரம் வாய்ந்த சிறப்பான ஃபாஸ்ட் பவுலிங் தான். பேட்ஸ்மேன்களை காட்டிலும் ஃபாஸ்ட் பவுலர்களுக்குத்தான் பணிச்சுமை அதிகம். 4 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடிய 2 பவுலர்கள் பும்ரா மற்றும் சிராஜ் தான்.

காயத்தால் 4வது டெஸ்ட்டில் ஆடிராத ஷமி, உடற்தகுதி பெற்றுவிட்டதால் கடைசி டெஸ்ட்டில் அவர் ஆடுவார். அவர் அணியில் இணைவதால் சிராஜ் நீக்கப்படுவார். எனவே சிராஜுக்கு ஓய்வு கிடைத்துவிடும். பும்ராவிற்கு மட்டும் தான் ஓய்வே இல்லை. முதல் 4 போட்டிகளிலும் ஆடிய பும்ரா, இந்த தொடரில் இதுவரை 150 ஓவர்கள் வீசியுள்ளார். எனவே அவரது பணிச்சுமையை கருத்தில்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

ஆனால் இன்னும் இந்திய அணி தொடரை வெல்லவில்லை என்பதால், கடைசி டெஸ்ட்டில் பும்ரா ஆடியாக வேண்டும் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், இந்திய அணி இன்னும் தொடரை வெல்லவில்லை. இதுவே 2-1 என்ற முன்னிலைக்கு பதிலாக 2-0 என்ற முன்னிலையில் இருந்தால், இந்திய அணி தொடரை வெல்வது உறுதியாகியிருக்கும். அதனால் பும்ராவிற்கு ஓய்வளிக்கலாம். ஆனால் கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்றால் தான் தொடரை வெல்ல முடியும் என்பதால், கடைசி டெஸ்ட்டில் பும்ரா ஆட வேண்டும். சிராஜுக்கு பதிலாக ஷமி ஆடவேண்டும் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios