இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான பாரம்பரியமான ஆஷஸ் தொடர் இன்று தொடங்கியுள்ளது. 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டி இதுதான். அடுத்த 2 ஆண்டுகளுக்கு நடக்கும் டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தான். அந்த வகையில் அதன் முதல் போட்டியே இதுதான். 

பர்மிங்காமில் நடந்துவரும் ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடிவருகிறது. தடை முடிந்து மீண்டும் அணிக்கு திரும்பிய வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் ஆகிய இருவரையும் ஆரம்பத்திலேயே தட்டி தூக்கினார் ஸ்டூவர்ட் பிராட். இன்னிங்ஸின் நான்காவது ஓவரிலேயே வார்னரை வெறும் 2 ரன்களில் வெளியேற்றிய பிராட், 8வது ஓவரில் பான்கிராஃப்ட்டை வீழ்த்தினார். 

ஆஸ்திரேலிய அணி 17 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இங்கிலாந்து அணிக்கு இது சிறப்பான தொடக்கம். உஸ்மான் கவாஜாவும் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்து ஆடிவருகின்றனர்.