Asianet News TamilAsianet News Tamil

விராட் கோலி தான் வேற யாரு..? ரசிகரின் கேள்விக்கு தயக்கமே இல்லாமல் டக்குனு பதில் சொன்ன ஸ்மித்

சமகாலத்தின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்விக்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் விராட் கோலி தான் என்று ஸ்டீவ் ஸ்மித பதிலளித்துள்ளார்.
 

steve smith picks virat kohli is the best odi batsman in current cricket
Author
Manchester, First Published Sep 10, 2020, 5:13 PM IST

விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரும் சமகாலத்தின் தலைசிறந்த டாப் 2 வீரர்களாக திகழ்கின்றனர். கோலி மற்றும் ஸ்மித் ஆகிய இருவருமே டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலுமே தலைசிறந்து விளங்குகின்றனர்.

இருவரும் 3 விதமான போட்டிகளிலும் மிகச்சிறப்பாக ஆடினாலும், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித்தும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். 

steve smith picks virat kohli is the best odi batsman in current cricket

சமகாலத்தின் சிறந்த வீரர்களாக திகழும் அவர்கள் இருவருக்கு இடையேயும் கடும் போட்டி இருந்தாலும், பொறாமை என்பது கிடையாது. அதை பல தருணங்களில் பார்த்திருக்கக்கூடும். ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை முடிந்து, மீண்டும் ஆடவந்த போது, ரசிகர்களின் வசைகளை வாங்கிக்கட்டினார். இந்தியாவுக்கு எதிரான போட்டியின்போது, ரசிகர்கள் ஸ்மித்தை கிண்டலடிக்க, அவரை கைதட்டி ஊக்கப்படுத்துமாறு ரசிகர்களை அறிவுறுத்தினார் கோலி. கோலியின் செயலைக்கண்டு ஸ்மித் நெகிழ்ந்தார். அந்தவகையில், இருவருக்கு இடையேயும் போட்டி இருக்கிறதே தவிர பொறாமை இல்லை.

steve smith picks virat kohli is the best odi batsman in current cricket

அதை மீண்டுமொரு முறை பறைசாற்றும் வகையில், தனது சமகால போட்டியாளராக இருந்தாலும், சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான் என்று ஸ்மித் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் நிலையில், ஒருநாள் தொடருக்காக காத்திருக்கும் ஸ்மித், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் யார் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, விராட் கோலி என்று ஸ்மித் பதிலளித்தார்.

ஸ்மித் சொன்னது நிதர்சனமான உண்மை என்றாலும், இருவருக்கும் இடையே ஆரோக்கியமான போட்டிதான் நிலவுகிறது என்பதை பறைசாற்றும் வகையில், இது அமைந்துள்ளார்.

steve smith picks virat kohli is the best odi batsman in current cricket

ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்கள் மற்றும் 59.34 என்ற சராசரியுடன் 11,867 ரன்களை குவித்துள்ளார் விராட் கோலி. ஒருநாள் கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் விராட் கோலி, அவரது கெரியர் முடிவதற்குள் கண்டிப்பாக சச்சின் டெண்டுல்கர், அதிக ஒருநாள் சதங்கள் மற்றும் ரன்கள் ஆகிய சாதனைகளை தகர்த்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios