Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND 3வது டெஸ்ட்: இந்த 11 பேரோட ஆடுங்கப்பா..! இங்கி., அணியில் 3 மாற்றங்களை பரிந்துரைத்த முன்னாள் வீரர்

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் 3 மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார் இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன்.
 

steve harmison picks england team playing eleven for third test
Author
Headingley, First Published Aug 24, 2021, 4:11 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

3வது டெஸ்ட் போட்டி நாளை(25ம் தேதி) தொடங்குகிறது. அந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி முனைப்பில் களமிறங்குகின்றன. 2வது டெஸ்ட்டில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணிக்கு அடுத்த டெஸ்ட்டில் வெற்றி அவசியம். எனவே அந்த அணி வெற்றி பெறுவதில் தீவிரமாக உள்ளது.

இந்நிலையில், 3வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் 3 மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார் முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன். ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட் காயத்தால் 3வது டெஸ்ட்டிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக க்ரைக் ஓவர்டனை அணியில் எடுக்கலாம் என ஹார்மிசன் தெரிவித்துள்ளார்.

தொடக்க வீரர் டோமினிக் சிப்ளியை நீக்கிவிட்டு, கடந்த போட்டியில் 3ம் வரிசையில் ஆடிய ஹசீப் ஹமீதை தொடக்க வீரராக இறக்கிவிட்டு, சிப்ளிக்கு பதிலாக டேவிட் மலானை அணியில் சேர்த்து அவரை 3ம் வரிசையில் இறக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளார். ஆல்ரவுண்டர் சாம் கரனை நீக்கிவிட்டு, ஆலி போப்பை சேர்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

ஸ்டீவ் ஹார்மிசன் தேர்வு செய்த 3வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி:

ஹசீப் ஹமீத், ரோரி பர்ன்ஸ், டேவிட் மலான், ஜோ ரூட்(கேப்டன்), ஆலி போப், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), மொயின் அலி, ஆலி ராபின்சன், க்ரைக் ஓவர்டன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios