உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று இன்றுடன் முடிவடைகிறது. இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. 

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டி லீட்ஸில் 3 மணிக்கும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயனா போட்டி மாலை 6 மணிக்கும் நடக்கிறது. 

இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டது. எனினும் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கான வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் தீவிரத்தில் களமிறங்கியுள்ளது. 

லீட்ஸில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஸ்பின் பவுலர் சாஹல் நீக்கப்பட்டு ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல ஷமி நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ரிஷப் பண்ட், தோனி(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பும்ரா. 

இலங்கை அணி:

கருணரத்னே(கேப்டன்), குசால் பெரேரா(விக்கெட் கீப்பர்), ஃபெர்னாண்டோ, குசால் மெண்டிஸ், திரிமன்னே, மேத்யூஸ், தனஞ்செயா டி சில்வா, திசாரா பெரேரா, உதானா, ரஜிதா, மலிங்கா.