ஆசிய கோப்பை தொடருக்கான தசுன் ஷனாகா தலைமையிலான 18 வீரர்களை கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் செப்டம்பர் 11ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆசிய கோப்பை தொடரில் கலந்துகொள்ளும் 6 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 2 அணிகளுடன் தகுதிச்சுற்றில் ஜெயிக்கும் அணி ஏ பிரிவில் 3வது அணியாக இணையும்.

இதையும் படிங்க - ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை வலுவாக பிடித்த தென்னாப்பிரிக்கா! பரிதாப இங்கிலாந்து

இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பி பிரிவில் இடம்பெற்றுள்ளன. ஆசிய கோப்பை தொடர் நெருங்கிவரும் நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

ஆசிய கோப்பை தொடருக்கான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தசுன் ஷனாகா தலைமையிலான 18 வீரர்களை கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியில் குட்டி மலிங்காவாக பார்க்கப்படும் பதிரனா சேர்க்கப்பட்டுள்ளார். மலிங்காவை போன்ற பவுலிங் ஆக்‌ஷனை கொண்ட மதீஷா பதிரனா, ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியில் ஆடினார். அவருக்கு ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியில் இடம் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க - ஆசிய கோப்பையிலிருந்து விலகிய மேட்ச் வின்னர்..! பாகிஸ்தானுக்கு பாதகம்.. இந்தியாவிற்கு சாதகம்

இலங்கை அணி:

தசுன் ஷனாகா (கேப்டன்), தனுஷ்கா குணதிலகா, பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ், சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சா, ஆஷன் பண்டாரா, தனஞ்செயா டி சில்வா, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்‌ஷனா, ஜெஃப்ரி வாண்டர்சே, பிரவீன் ஜெயவிக்ரமா, துஷ்மந்தா சமீரா, சாமிகா கருணரத்னே, தில்ஷான் மதுஷங்கா, மதீஷா பதிரனா, தினேஷ் சண்டிமால், நுவானிது ஃபெர்னாண்டோ.