Asianet News TamilAsianet News Tamil

Asia Cup ஃபைனலில் மோதும் இலங்கை - பாகிஸ்தான் அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

ஆசிய கோப்பை ஃபைனலில் இன்று களமிறங்கும் இலங்கை - பாகிஸ்தான் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

sri lanka and pakistan teams probable playing eleven for asia cup 2022 final
Author
First Published Sep 11, 2022, 3:07 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், இன்றுடன் முடிவடைகிறது. பாகிஸ்தான் - இலங்கை அணிகள் ஃபைனலுக்கு முன்னேறின.

இன்று துபாயில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி தொடங்குகிறது. இந்த இறுதிப்போட்டிக்கு முன்னோட்டமாக சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில், அந்த போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி.. ஆஷிஷ் நெஹ்ராவின் அதிரடி தேர்வு..! சீனியர் வீரருக்கு அணியில் இடம் இல்லை

துபாயில் டாஸ் வெல்லும் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்கிறது. இலக்கை விரட்டும் அணி தான் பெரும்பாலும் துபாயில் ஜெயிக்கிறது. எனவே டாஸ் வென்றாலே பாதி ஜெயித்தது மாதிரிதான். இலங்கை அணி இலக்கை விரட்டினால் மட்டுமே டி20 கிரிக்கெட்டில் பெரும்பாலும் ஜெயிக்கிறது. முதலில் பேட்டிங் ஆடினால் தோற்றுவிடுகிறது. அதிலும் துபாயில் இலக்கை விரட்டும் அணிகள் தான் ஜெயிக்கின்றன. எனவே டாஸ் இந்த போட்டியில் முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த சூப்பர் 4 போட்டியில், சாரித் அசலங்கா மற்றும் அசிதா ஃபெர்னாண்டோ ஆகியோருக்கு பதிலாக களமிறங்கிய தனஞ்செயா டி சில்வா மற்றும் பிரமோத் மதுஷன் ஆகிய இருவரும் அபாரமாக ஆடியதால் அவர்களை இலங்கை அணி நீக்குவது சந்தேகம் தான்.

உத்தேச இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சாரித் அசலங்கா/தனஞ்செயா டி சில்வா, தனுஷ்கா குணதிலகா, வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்‌ஷனா, பிரமோத் மதுஷன்/அசிதா ஃபெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்கா.

பாகிஸ்தான் அணியில் கடந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட ஷதாப் கான் மற்றும் நசீம் ஷா ஆகிய இருவரும் ஃபைனலில் ஆடுவார்கள் என்பதால் ஹசன் அலி மற்றும் உஸ்மான் காதிர் நீக்கப்படுவார்கள்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: இந்திய அணியின் நலன் கருதி அதிரடி முடிவு..! குஷியில் கோலி.. பீதியில் ராகுல்

உத்தேச பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், ஃபகர் ஜமான், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிஃப் அலி, முகமது நவாஸ், ஷதாப் கான், ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா, முகமது ஹஸ்னைன்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios