பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடக்கும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸூம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன.
இரு அணிகளுமே இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், 4வது வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ளன. முதல் 2 போட்டிகளில் தோற்று, அதன்பின்னர் ஹாட்ரிக் வெற்றிகளை பெற்ற கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் களமிறங்கிய நிலையில், அந்த அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்குகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
அபிஷேஷ் ஷர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷான்க் சிங், ஜெகதீஷா சுஜித், புவனேஷ்வர் குமார், மார்கோ யான்சென், உம்ரான் மாலிக், டி.நடராஜன்.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேப்டன் மயன்க் அகர்வாலே ஆடவில்லை. அவருக்கு கணுக்காலில் காயம் காரணமாக அவர் ஆடவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் பிரப்சிம்ரான் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். மயன்க் ஆடாததால் தவான் கேப்டன்சி செய்கிறார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, பிரப்சிம்ரான் சிங், லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக்கான், ஒடீன் ஸ்மித், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங்.
