சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய கடைசி லீக் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டன. இன்று மும்பை வான்கடேவில் நடக்கும் கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் பஞ்சாப் கிங்ஸும் மோதுகின்றன.

இந்த போட்டி புள்ளி பட்டியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால், உப்புச்சப்பில்லாத போட்டியாகத்தான் இது இருக்கும். ஆனால் யாராவது அபாரமான இன்னிங்ஸ் ஆடினால் பார்க்க நன்றாக இருக்கும்.

இந்த போட்டி முக்கியமில்லாத போட்டிதான் என்றாலும் இந்த போட்டியில் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் தான் களமிறங்கும். இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

சன்ரைசர்ஸ் அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆடமாட்டார். அதனால் புவனேஷ்வர் குமார் கேப்டன்சி செய்வார். வில்லியம்சனுக்கு பதிலாக க்ளென் ஃபிலிப்ஸ் சேர்க்கப்படுவார்.

உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

பிரியம் கர்க், அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, மார்க்ரம், க்ளென் ஃபிலிப்ஸ், நிகோலஸ் பூரன் (விக்கெட்கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெஃபெர்டு/சீன் அபாட், புவனேஷ்வர் குமார் (கேப்டன்), டி.நடராஜன், உம்ரான் மாலிக்.

உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:

ஜானி பேர்ஸ்டோ, ஷிகர் தவான், மயன்க் அகர்வால் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), பென்னி ஹவல், ஷாருக்கன், ரிஷி தவான்/இஷான் போரெல், ராகுல் சாஹர், ரபாடா, அர்ஷ்தீப் சிங்.