உலக கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.

தென்னாப்பிரிக்க அணி ஆடிய 7 போட்டிகளில் ஒரேயொரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளதால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது. இலங்கை அணி 6 போட்டிகளில் ஆடி 6 புள்ளிகளை பெற்றுள்ளது. அந்த அணி எஞ்சிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

வெற்றி கட்டாயத்தில் இருக்கும் இலங்கை அணி, இழப்பதற்கு ஒன்றுமில்லாத தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டு ஆடுகிறது. இந்த போட்டியில் இலங்கை அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் திரிமன்னே ஆடவில்லை. 

தென்னாப்பிரிக்க அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதிரடி வீரர் டேவிட் மில்லருக்கு பதிலாக அனுபவ வீரர் ஜேபி டுமினி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல ஃபாஸ்ட் பவுலர் லுங்கி இங்கிடி நீக்கப்பட்டு ப்ரிடோரியஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இலங்கை அணி:

கருணரத்னே(கேப்டன்), குசால் பெரேரா(விக்கெட் கீப்பர்), ஃபெர்னாண்டோ, குசால் மெண்டிஸ், மேத்யூஸ், தனஞ்செயா டி சில்வா, திசாரா பெரேரா, ஜீவன் மெண்டிஸ், உடானா, மலிங்கா, லக்மல்.

தென்னாப்பிரிக்க அணி:

டி காக்(விக்கெட் கீப்பர்), ஆம்லா, டு ப்ளெசிஸ்(கேப்டன்), மார்க்ரம், டுமினி, வாண்டெர் டசன், ஃபெலுக்வாயோ, கிறிஸ் மோரிஸ், ப்ரிடோரியஸ், ரபாடா, இம்ரான் தாஹிர்.