Asianet News TamilAsianet News Tamil

உலக கோப்பையின் முதல் போட்டி.. இங்கிலாந்து அணியில் இளம் வீரருக்கு வாய்ப்பு.. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பவுலிங்

இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த உலக கோப்பை ஹை ஸ்கோரிங் தொடராக அமைவது உறுதியாகிவிட்டது. அப்படியிருக்கையில் பேட்டிங்கில் வலுவான இங்கிலாந்து அணியை டாஸ் செய்ய பணித்துள்ளார் தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ்.
 
south africa won toss and elected to bowl
Author
England, First Published May 30, 2019, 3:16 PM IST

கிரிக்கெட் உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உலக கோப்பை தொடர் இன்று தொடங்கியது. 

முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. 

இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த உலக கோப்பை ஹை ஸ்கோரிங் தொடராக அமைவது உறுதியாகிவிட்டது. அப்படியிருக்கையில் பேட்டிங்கில் வலுவான இங்கிலாந்து அணியை டாஸ் செய்ய பணித்துள்ளார் தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ்.

south africa won toss and elected to bowl

இங்கிலாந்து அணியில் கடைசி நேரத்தில் அணியில் சேர்க்கப்பட்ட இளம் ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. காயத்தால் அவதிப்பட்டு வரும் தென்னாப்பிரிக்க அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் டேல் ஸ்டெய்ன் அணியில் இல்லை. 

இங்கிலாந்து அணி:

பேர்ஸ்டோ, ராய், ரூட், இயன் மோர்கன்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், பிளெங்கெட், ஆர்ச்சர்.

தென்னாப்பிரிக்க அணி:

ஆம்லா, டி காக், மார்க்ரம், டுபிளெசிஸ்(கேப்டன்), வாண்டர் டுசேன், ஜேபி டுமினி, ப்ரிடோரியஸ், ஃபெலுக்வாயோ, ரபாடா, இங்கிடி, இம்ரான் தாஹிர்.
 
Follow Us:
Download App:
  • android
  • ios