Asianet News TamilAsianet News Tamil

IND vs SA: தொடரை வெல்லப்போவது யார்..? கடைசி டி20 போட்டி டாஸ் ரிப்போர்ட்! தென்னாப்பிரிக்க அணியில் 3 மாற்றங்கள்

இந்தியாவிற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

south africa win toss opt to field against india in last t20
Author
Bengaluru, First Published Jun 19, 2022, 6:50 PM IST

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளன. அதனால் தொடர் 2-2 என சமனடைந்துள்ளது.

தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ஆடவில்லை. அதனால் கேஷவ் மஹராஜ் கேப்டனாக செயல்படுகிறார்.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த தொடரின் 5 போட்டிகளிலும் ரிஷப் பண்ட் டாஸ் தோற்றுள்ளார்.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளது.

இந்திய அணி:

ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட்கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான்.

தென்னாப்பிரிக்க அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டெம்பா பவுமா, மார்கோ யான்சென், ஷாம்ஸி ஆகிய மூவரும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரீஸா ஹென்ரிக்ஸ், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ரபாடா ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீஸா ஹென்ரிக்ஸ், வாண்டர் டசன், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசன், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ட்வைன் பிரிட்டோரியஸ், ரபாடா, கேஷவ் மஹராஜ் (கேப்டன்), லுங்கி இங்கிடி, அன்ரிக் நோர்க்யா.
 

Follow Us:
Download App:
  • android
  • ios