Asianet News TamilAsianet News Tamil

IND vs SA 4வது டி20: மறுபடியும் டாஸ் தோற்ற ரிஷப் பண்ட்! தென்னாப்பிரிக்க அணியில் 3 மாற்றங்கள்

இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 

south africa win toss opt to field against india in fourth t20
Author
Rajkot, First Published Jun 17, 2022, 6:44 PM IST

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்காவும், 3வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற, தென்னாப்பிரிக்கா 2-1 என முன்னிலை வகிக்கிறது.

4வது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று டி20 தொடரை வெல்லும் முனைப்பில் தென்னாப்பிரிக்க அணியும், இந்த போட்டியில் வென்று டி20 தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும் மோதுகின்றன.

முதல் 3 போட்டிகளில் டாஸ் தோற்ற இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட், இந்த போட்டியிலும் டாஸ் தோற்றார். வழக்கம்போலவே டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தார் தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பார்த்ததை போலவே எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளது.

இந்திய அணி:

இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான்.

தென்னாப்பிரிக்க அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயத்தால் கடந்த 2 போட்டிகளில் ஆடாத குயிண்டன் டி காக் முழு ஃபிட்னெஸுடன் மீண்டும் அணிக்கு திரும்பியதால் ரீஸா ஹென்ரிக்ஸ் நீக்கப்பட்டுள்ளார். மேலும் ரபாடா மற்றும் பர்னெல் ஆகிய இருவருக்கு பதிலாக மார்கோ யான்சென் மற்றும் லுங்கி இங்கிடி ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்க அணி:

டெம்பா பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக், ட்வைன் பிரிட்டோரியஸ், வாண்டர் டசன், ஹென்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், மார்கோ யான்சென், கேஷவ் மஹராஜ், அன்ரிக் நோர்க்யா, லுங்கி இங்கிடி, டப்ரைஸ் ஷாம்ஸி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios