Asianet News TamilAsianet News Tamil

ENG vs SA: பென் ஸ்டோக்ஸின் ஃபேர்வெல் ஒருநாள் போட்டி.! டாஸ் ரிப்போர்ட்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

south africa win toss opt to bat against england in first odi and this is the farewell odi for ben stokes
Author
Chester-le-Street, First Published Jul 19, 2022, 5:27 PM IST

தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடுகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று செஸ்டர் லீ-ஸ்ட்ரீட்டில் நடக்கிறது. 

சில தினங்களுக்கு முன் சொந்த மண்ணில் இந்தியாவிடம் ஒருநாள் தொடரை இழந்த இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்று, இந்தியாவிடம் பட்ட காயத்திற்கு மருந்து போடும் முனைப்பில் உள்ளது. 

ஜோஸ் பட்லர் இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டன்சியை ஏற்றபின் ஆடிய டி20 மற்றும் ஒருநாள் ஆகிய 2 தொடர்களையும் இந்தியாவிடம் இழந்த இங்கிலாந்து அணி, வெற்றி வேட்கையில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

இதையும் படிங்க - விராட் கோலியுடன் பேச ஒரு 20 நிமிடம் கிடைத்தால் போதும்.. அவரை ஃபார்முக்கு கொண்டு வந்துருவேன் - சுனில் கவாஸ்கர்

மேலும், இந்த போட்டியுடன் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ஓய்வுபெறுவதாக அறிவித்திருப்பதால், அவரது கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றியுடன் அவருக்கு ஃபேர்வெல் கொடுக்கும் முனைப்பில் உள்ளது இங்கிலாந்து அணி.

பென் ஸ்டோக்ஸின் ஃபேர்வெல் ஒருநாள் போட்டியான, இந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க் கேப்டன் கேஷவ் மஹராஜ் பேட்டிங்கை  தேர்வு செய்தார்.

தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ஜே மலான், ராசி வாண்டர் டசன், எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், ஆண்டில் ஃபெலுக்வாயோ, கேஷவ் மஹராஜ் (கேப்டன்), அன்ரிக் நோர்க்யா, லுங்கி இங்கிடி, டப்ரைஸ் ஷாம்ஸி.

இதையும் படிங்க - நான் மட்டும் கோலி கேப்டன்சியில் ஆடியிருந்தால் இந்தியா 3 உலக கோப்பைகளை ஜெயிச்சுருக்கும் - ஸ்ரீசாந்த்

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, சாம் கரன், அடில் ரஷீத், ப்ரைடன் கர்ஸ், மேட்டி பாட்ஸ்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios