Asianet News TamilAsianet News Tamil

#SAvsSL 2வது டெஸ்ட்: திடீரென சீட்டுக்கட்டாய் சரிந்த தென்னாப்பிரிக்க பேட்டிங் ஆர்டர்..! அதிர்ச்சி சம்பவம்

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 218வது ரன்னில் 2வது விக்கெட்டை இழந்த தென்னாப்பிரிக்க அணி, 302 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 

south africa suddenly lost wickets and all out for 302 runs against sri lanka in second test
Author
Johannesburg, First Published Jan 4, 2021, 6:42 PM IST

தென்னாப்பிரிக்கா இலங்கை இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் மார்க்ரம் ஐந்து ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரர் டீன் எல்கருடன் வாண்டெர்டசன் ஜோடி சேர்ந்தார். எல்கர் மற்றும் வாண்டெர்டசன் ஆகிய இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினர். அபாரமாக ஆடிய எல்கர் சதமடித்தார்; வாண்டெர்டசன் அரைசதம் அடித்தார். சதமடித்த எல்கர் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 184 ரன்களை குவித்தனர். எல்கரை தொடர்ந்து வாண்டர்டசனும் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் டுப்ளெசிஸ், டி காக், டெம்பா பவுமா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 218வது ரன்னில் 2வது விக்கெட்டை இழந்த தென்னாப்பிரிக்க அணி, 302 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. விஷ்வா ஃபெர்னாண்டோ அதிகபட்சமாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios