பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணி வெற்றியை நோக்கி ஆடிக்கொண்டிருக்கிறது. 

தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில் 2வது டெஸ்ட் ராவல்பிண்டியில் நடந்துவருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 272 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 201 ரன்களுக்கு சுருண்டது.

171 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி, முகமது ரிஸ்வானின் அபார சதத்தால்(115) 298 ரன்கள் அடித்து, மொத்தமாக 369 ரன்கள் முன்னிலை பெற்றது.

370 ரன்கள் என்ற வெற்றி இலக்கை விரட்டிவரும் தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர் வெறும் 17 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் மார்க்ரமுடன் ஜோடி சேர்ந்த வாண்டர்டசன் சிறப்பாக பேட்டிங் ஆடினார். சிறப்பாக ஆடிய மார்க்ரம் அரைசதம் அடிக்க, 4ம் நாள் ஆட்ட முடிவில் தென்னாப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் அடித்துள்ளது.

மார்க்ரம் 59 ரன்களுடனும், வாண்டர்டசன் 48 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். கடைசி நாளான நாளைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 243 ரன்கள் தேவை. அந்த அணியிடம் இன்னும் 9 விக்கெட்டுகள் மீதமிருப்பதால் கடைசி நாளில் 243 ரன்களை தென்னாப்பிரிக்க அணி அடித்துவிடும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது.