கடவுள் எனது மிகப்பெரிய ஆசிர்வாதம், வாய்ப்பை கொடுத்தவர்: ராம் சியா ராம் பின்னணி ரகசியம் – கேசவ் மகாராஜ்!
இந்தியாவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் போது ராம் சியா ராம் பாடலை டிஜே பிளே பண்ண என்ன காரணம் என்பது குறித்து தென் ஆப்பிரிக்கா வீரர் கேசவ் மகாராஜ் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 15.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்கள் எடுத்து விளையாடி வந்தது. அப்போது கேசவ் மகாராஜ் களமிறங்கின்றார். அவர் மைதானத்திற்குள் வரும் போது ராம் சியா ராம் என்ற பாடலை டிஜே பிளே செய்துள்ளார். இதற்கு விராட் கோலி ஸ்ரீ ராமரை போன்று வில் அம்பை இழத்து எய்வது போன்று போஸ் கொடுத்தார். இந்த வீடியோ அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் தான் தென் ஆப்பிரிக்கா20 சீரிஸ் நாளை தொடங்க உள்ள நிலையில், ராம் சியா ராம் பாடல் ஒலிக்கப்பட்டதற்கான பின்னணி காரணம் குறித்து கேசவ் மகாராஜ் வெளிப்படையாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: வெளிப்படையாக, நான் ஊடகப் பெண்ணிடம் முன்வைத்து அந்தப் பாடலை இசைக்குமாறு கேட்டுக் கொண்டேன். என்னைப் பொறுத்தவரை, கடவுள் எனது மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருந்தார், எனக்கு வழிகாட்டுதலையும் வாய்ப்பையும் அளித்துள்ளார். எனவே, நான் செய்யக்கூடியது இது மிகக் குறைவு. பின்னணியில் 'ராம் சியா ராம்' இசைப்பதைக் கேட்க, வெளியே (தரையில்) நடப்பது ஒரு இனிமையான உணர்வு என்று கூறியுள்ளார்.
National Sports Awards 2023: அர்ஜூனா விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி!
இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கேப்டவுனில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.