Asianet News TamilAsianet News Tamil

#PAKvsSA பாகிஸ்தானிடம் சவுண்டே இல்லாமல் சரணடையும் தென்னாப்பிரிக்க பேட்டிங் ஆர்டர்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணி மளமளவென முதல் ஐந்து விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
 

south africa batting order surrendering to pakistan bowlers in first test
Author
Karachi, First Published Jan 26, 2021, 2:31 PM IST

தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர் நிலைத்து நிற்க, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. மற்றொரு தொடக்க வீரரான மார்க்ரம் 13 ரன்களில் ஷாஹீன் அஃப்ரிடியின் வேகத்தில் விழ, வாண்டர் டசன் 17 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். 

south africa batting order surrendering to pakistan bowlers in first test

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான டுப்ளெசிஸ், 23 ரன்னில் யாசிர் ஷாவின் சுழலில் வீழ்ந்தார். கேப்டன் குயிண்டன் டி காக் பதினைந்து ரன்னில் இடது கை ஸ்பின்னர் நௌமன் அலியின் பந்தில் ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய, மறுமுனையில் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்த டீன் எல்கர், ஐந்தாவது விக்கெட்டாக நௌமன் அலியின் பந்தில் 58 ரன்களுக்கு ஆட்டமிழக்க,  136 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

டெம்பா பவுமாவும் ஜார்ஜ் லிண்டேவும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios