ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், கடைசி போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

தொடக்க வீரர்கள் ஜோ பர்ன்ஸ் 18 ரன்னிலும் வார்னர் 45 ரன்களிலும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் லபுஷேனும் ஸ்மித்தும் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடிவருகின்றனர். ஒவ்வொரு இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடி நல்ல ஸ்கோர் செய்துவரும் லபுஷேன், இந்த போட்டியிலும் சதமடித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிவரும் ஸ்மித்தும் அரைசதம் கடந்துவிட்டார். 

ஆஸ்திரேலிய அணி 95 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின்னர் நான்காவது பேட்ஸ்மேனாக களத்திற்கு வந்து லபுஷேனுடன் ஜோடி சேர்ந்தார் ஸ்மித். ஸ்மித் களத்திற்கு வந்ததும் அவருக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் விதமாக நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் அவருக்கு பவுன்ஸர்களை வீசினார். ஆனால் அதற்கெல்லாம் அசராத ஸ்மித், மிகவும் நிதானமாக அவற்றை எதிர்கொண்டார். 

ரொம்ப பொறுமையாக ஆடிய ஸ்மித், ஃபாஸ்ட் பவுலிங் மட்டுமல்லாமல் ஸ்பின் பவுலிங்கிலும் கூட ரன்னே அடிக்கவில்லை. களத்திற்கு வந்து ஸ்மித் எதிர்கொண்ட முதல் 38 பந்தில் ஒரு ரன் கூட அவர் அடிக்கவில்லை. 39வது பந்தில்தான் முதல் ரன்னையே அடித்தார். வாக்னரின் பந்தில் முதல் ரன்னை அடித்தார். ஸ்மித் 39வது பந்தில் ஒருவழியாக முதல் ரன் அடித்ததும், அதை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடினர். ஸ்மித்தே சிரித்துவிட்டார். பவுலர் வாக்னரும் அவரை தட்டிக்கொடுத்துவிட்டு சென்றார். அந்த வீடியோ இதோ..