ஸ்மித் இல்லாததால், அந்த நேரத்தில் பெரியளவில் அனுபவமில்லாத டிம் பெய்ன் கேப்டனாக்கப்பட்டார். 26 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள டிம் பெய்ன் ஒரு சதம் கூட அடித்ததில்லை. பேட்டிங்கில் தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பிவருகிறார் டிம் பெய்ன். டிம் பெய்னின் கேப்டன்சியில் தான், ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் முதன்முறையாக இந்திய அணியிடம் டெஸ்ட் தொடரை இழந்தது. 

ரிஷப் பண்ட் கூட, டிம் பெய்னை தற்காலிக கேப்டன் என்று டெஸ்ட் போட்டியின் போது கிண்டலடித்திருந்தார். மேலும் பலரும் டிம் பெய்னை ஆக்ஸிடெண்டல் கேப்டன் என்று விமர்சித்தனர். டிம் பெய்ன் பேட்டிங் மற்றும் கேப்டன்சி என இரண்டிலுமே சொதப்பிவரும் நிலையில், தடை முடிந்து மீண்டும் அணியில் இணைந்த ஸ்மித், ஆஷஸ் தொடரில் அபாரமாக ஆடி அசத்தியதோடு, டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தையும் பிடித்துவிட்டார். எனவே மீண்டும் ஸ்மித்தை கேப்டனாக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. 

ஸ்மித் கேப்டனாவது குறித்த விவாதங்கள் வலுத்த நிலையில், ஸ்மித் மீண்டும் கேப்டனாக விரும்பினால், அவருக்கு தனது முழு ஆதரவு இருப்பதாகவும், தானே முன்வந்து கேப்டன்சியை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாகவும் டிம் பெய்ன் தெரிவித்திருந்தார். 

ஆனால் தனக்கு இனிமேல் கேப்டனாகும் ஐடியாவே இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் ஸ்மித். மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்பது குறித்து பேசிய ஸ்மித், இனிமேல் கண்டிப்பாக கேப்டனாக மாட்டேன். ஃபின்ச்சும் டிம் பெய்னும் சிறப்பாக கேப்டன்சி செய்து அணியை நன்றாக வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள். எனவே நான் எனது ஆட்டத்தை மகிழ்ந்து ஆடிக்கொண்டிருக்கிறேன். அதனால் இனிமேல் கேப்டனாகும் பேச்சுக்கே இடமில்லை என்று ஸ்மித் தெரிவித்துவிட்டார்.