Asianet News TamilAsianet News Tamil

கொரோனா ஊரடங்கு: தென்னாப்பிரிக்கா, இலங்கையின் ஆல்டைம் டெஸ்ட் அணி.. ஷேன் வார்னின் அதிரடி தேர்வு

கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியிருக்கும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன், தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கையின் ஆல்டைம் டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ளார்.
 

shane warne picks south africa and sri lanka all time test teams
Author
Australia, First Published Apr 3, 2020, 10:50 PM IST

கொரோனா உலகையே அச்சுறுத்திவரும் நிலையில், மனித குலமே வீட்டில் முடங்கியுள்ளது. விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்தாகிவிட்டன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், வீடுகளில் முடங்கியிருக்கும் கிரிக்கெட் வீரர்கள், சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது அல்லது மற்ற முன்னாள் இந்நாள் வீரர்களுடன் வீடியோ காலில் உரையாடுவது ஆகிய செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்தவகையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளின் ஆல்டைம் சிறந்த டெஸ்ட் அணிகளை தேர்வு செய்திருந்தார்.

இந்நிலையில், விடுபட்ட தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கையின் ஆல்டைம் அணிகளையும் தேர்வு செய்துள்ளார். ஷேன் வார்ன் தேர்வு செய்த தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக க்ரேம் ஸ்மித்தை தேர்வு செய்துள்ளார். 

shane warne picks south africa and sri lanka all time test teams

ஸ்மித் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியில் கேரி கிறிஸ்டன், ஜாக் காலிஸ், டிவில்லியர்ஸ், க்ரோன்ச், ஜாண்டி ரோட்ஸ் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். விக்கெட் கீப்பராக மார்க் பவுச்சரையும் ஃபாஸ்ட் பவுலர்களாக டேல் ஸ்டெய்ன், ஆலன் டொனால்டு ஆகிய இருவரையும் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக ஷான் போலாக்கையும் தேர்வு செய்துள்ளார். ஸ்பின் பவுலராக பாட் சும்காக்ஸை தேர்வு செய்துள்ளார்.

ஷேன் வார்ன் தேர்வு செய்த ஆல்டைம் தென்னாப்பிரிக்க அணி:

க்ரேம் ஸ்மித்(கேப்டன்), கேரி கிறிஸ்டன், ஜாக் காலிஸ், டிவில்லியர்ஸ், ஹான்சி க்ரோன்ச், ஜாண்டி ரோட்ஸ், மார்க் பவுச்சர்(விக்கெட் கீப்பர்), ஷான் போலாக், பாட் சிம்காக்ஸ், டேல் ஸ்டெய்ன், ஆலன் டொனால்டு.

ஷேன் வார்ன் தேர்வு செய்த ஆல்டைம் இலங்கை அணி:

சனத் ஜெயசூரியா, மார்வன் அட்டப்பட்டு, அரவிந்த் டி சில்வா, மஹேலா ஜெயவர்தனே(கேப்டன்), குமார் சங்கக்கரா(விக்கெட் கீப்பர்), அர்ஜூனா ரணதுங்கா, ரோமேஷ் கலுவிதரானா, சமிந்தா வாஸ், ரங்கனா ஹெராத், முத்தையா முரளிதரன், ருமேஷ் ரத்னயாகே.

Follow Us:
Download App:
  • android
  • ios