Asianet News TamilAsianet News Tamil

மும்பை இந்தியன்ஸுடன் ஒப்பிட்டால் சிஎஸ்கே-லாம் ஒரு டீமா..? முன்னாள் வீரர் அதிரடி

ஐபிஎல்லில் சிஎஸ்கேவை விட மும்பை இந்தியன்ஸ் தான் வெற்றிகரமான அணி என இந்திய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.
 

sanjay manjrekar says mumbai indians better team than csk in ipl
Author
India, First Published Apr 8, 2020, 10:21 PM IST

ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலால் நடப்பது சந்தேகமாகியுள்ளது. ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளாக மும்பை இந்தியன்ஸூம் சிஎஸ்கேவும் திகழ்கின்றன.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 4 முறை ஐபிஎல் டைட்டிலை வென்றுள்ளது. சிஎஸ்கே அணி 3 முறை கோப்பையை வென்றுள்ளது. சிஎஸ்கே அணி சூதாட்ட புகார் காரணமாக 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு சீசன்களிலும் ஆடவில்லை. எனவே அந்த அணி இதுவரை ஆடியுள்ள 10 சீசன்களில் 8 சீசன்களில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று அவற்றில் 3 முறை கோப்பையை வென்றுள்ளது. 

sanjay manjrekar says mumbai indians better team than csk in ipl

சிஎஸ்கே அணி ஆடிய 10 சீசன்களிலுமே பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுள்ளது. லீக் சுற்றில் வெளியேறியதே கிடையாது. அனைத்து சீசன்களிலுமே பிளே ஆஃபிற்கு தகுதி பெற்ற ஒரே அணி சிஎஸ்கே மட்டும்தான். அந்தளவிற்கு சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய அணி  சிஎஸ்கே. 

சிஎஸ்கே அணி 3 முறை கோப்பையை வென்றிருந்தாலும், மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவின் தலைமையில் பூதாகரமாக உருவெடுத்த பின்னர், மும்பை இந்தியன்ஸை சிஎஸ்கேவால் அசைக்கவே முடியவில்லை என்பதுதான் உண்மை. 2011, 2012 ஆகிய சீசன்களில் ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியை 2013, 2015, 2019 ஆகிய மூன்று சீசன்களின் இறுதி போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் வீழ்த்தி, கோப்பையை வென்றிருக்கிறது. 

sanjay manjrekar says mumbai indians better team than csk in ipl

மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறை கோப்பையை வென்றிருந்தாலும், இரு அணிகளூம் நேருக்கு நேர் இறுதி போட்டியில் மோதிய 4 சீசனில் மூன்று முறை மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றிருக்கிறது. ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, சிஎஸ்கேவை ஃபைனலில் எதிர்கொண்ட மூன்று முறையும் மும்பை இந்தியன்ஸ் தான் வென்றது.  

மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கேவைவிட அதிக முறை கோப்பையை வென்றிருந்தாலும், சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்கு நிறைய வீரர்களை உருவாக்கி கொடுத்தது ஆகியவற்றின் அடிப்படையில், மும்பை இந்தியன்ஸை விட சிஎஸ்கே-வே ஐபிஎல்லின் வெற்றிகரமான அணி என நியூசிலாந்து முன்னாள் ஜாம்பவான் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்தார்.

sanjay manjrekar says mumbai indians better team than csk in ipl

ஆனால் எப்போதுமே மும்பை இந்தியன்ஸின் விசுவாசியான சஞ்சய் மஞ்சரேக்கர், மும்பை இந்தியன்ஸ் தான் கெத்து என தெரிவித்தார். இதுகுறித்து பேசிய சஞ்சய் மஞ்சரேக்கர், ஐபிஎல்லில் 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. வின்னிங் சதவிகித்தை பார்த்தால் சிஎஸ்கேதான் டாப் என்றாலும், மும்பை இந்தியன்ஸ் அணி எழுச்சி பெற்ற பின்னர், ஐபிஎல்லின் இரண்டாம் பாதியில் சிஎஸ்கேவை மும்பை இந்தியன்ஸ் அணி அச்சுறுத்தியது மட்டுமல்லாமல் 4 முறை டைட்டிலையும் வென்றுள்ளது.

sanjay manjrekar says mumbai indians better team than csk in ipl

மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கேவை விட ஐபிஎல்லில் வெற்றிகரமான அணி. ஐபிஎல்லில் சிஎஸ்கே டாப் அணி என்றாலும், கடந்த சில ஆண்டுகளில் சிஎஸ்கேவை விட மும்பை இந்தியன்ஸ் அணி சற்று மேலாகத்தான் உள்ளது என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios